Actress Tamannaah Latest Clicks 
சினிமா

தக தக தக... தமன்னா பகிர்ந்த கலக்கல் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

தகதகவென மின்னும் ஸ்டைலிஷ் லுக்குடன் நடிகை தமன்னா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் பலவும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
 

2006-ல் ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் நடிகை தமன்னா. ‘கல்லூரி’, ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘சூறா’ என வரிசையாக பல படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர்.

‘பாகுபலி’ ஆக்‌ஷன் அழகுடன் கவர்ந்தவர் தமன்னா. கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் கண்டனர் தமிழ் ரசிகர்கள்.
 

‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டி வைரல் வேட்டையாடினார் தமன்னா. அவரது நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் மகத்தான சாதனை படைத்தது.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் தமன்னா நடித்திருந்த ‘சிகந்த கா முகாதர்’ நெட்ஃப்ளிக் ஓடிடி தளத்தில் கவனம் ஈர்த்தது. தற்போது அடுத்தடுத்து படங்களின் அணிவகுப்புடன் தமன்னா பிஸியாக இருக்கிறார் தமன்னா.

இப்போது தெலுங்கில் இவர் நடித்துள்ள ‘ஓடெலா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.  இதில் சிவன் பக்தராக நடித்துள்ளார் தமன்னா.

தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவரது அடுத்த தமிழ்ப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்ப்பு மிகுந்துள்ள நிலையில், அவ்வப்போது தன் இன்ஸ்டா பக்கம் மூலம் விதவிதமாக தரிசனம் தருகிறார் தமன்னா.

SCROLL FOR NEXT