தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் வளரும் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. 2021-ல் ‘உப்பென்னா’ தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘தி வாரியர்’ படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நாக சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. தமிழில் கீர்த்தி ஷெட்டி நடிப்பில், ‘வா வாத்தியாரே’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது சமீபத்திய இன்ஸ்டா பகிர்வு க்ளிக்ஸ் இவை...