Kalidas jayaram Tarini kalingarayar pre wedding event 
சினிமா

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமண முன்வைபவ நிகழ்வு ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் இருவருக்கும் வரும் டிசம்பர் 8-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ப்ரீ வெட்டிங் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தமிழ், மலையாளத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயரைக் காதலித்து வருகிறார். இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 
 

இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 8-ம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறுகிறது. இதையொட்டி இருவீட்டாரும் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் திருமணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 
 

இந்நிகழ்வில் ஜெயராம், தனது மகனின் திருமணம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் பேசுகையில், “எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்களில் இதுவும் ஒன்று. காளிதாஸின் திருமணம் என்ற கனவு எங்களுக்கு இப்போது நனவாகியுள்ளது” என்றார். 

மேலும், “நான் படப்பிடிப்புகளுக்கு சென்ற நாள்கள் முதல், காளிங்கராயரின் குடும்பம் குறித்து அதிகமாக கேள்விபட்டிருக்கிறேன். அத்தகைய குடும்பத்தில் இருந்து வந்த தாரிணி, எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறப்போவது எங்களின் ஆசீர்வாதம்” என ஜெயராம் தெரிவித்தார்.  

கடந்த ஆண்டு நவம்பரில், மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் என்பவருடன் காளிதாசுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
 

24 வயதான தாரிணி நீலகிரியைச் சேர்ந்தவர். இவர் 2021 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT