actress ramya pandian marriage album 
சினிமா

நடிகை ரம்யா பாண்டியன் திருமண ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லோவல் தவானும் (Lovel Dhawan) இன்று ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அடுத்து ‘ஜோக்கர்’ படத்தில் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

மேலும், ‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.

கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். 

அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது. இருவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷ், சிவ்புரி கங்கை ந்திக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன் - லோவல் தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது.

இதில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவும் நடிகருமான அருண் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT