national flim awards event held in delhi 
சினிமா

நித்யா மேனன் முதல் ரஹ்மான் வரை: தேசிய விருதுகள் நிகழ்வு ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று புது டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக நித்யா மேனனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். 

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ திரைப்படத்துக்காக ரிஷப் ஷெட்டி பெற்றார். 

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக, நடன இயக்குநர் சதீஷ் தேசிய விருது பெற்றார். பாலியல் புகாரில் சிக்கிய ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த தமிழ் படமாக ‘பொன்னியின் செல்வன் 1’ தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இயக்குநர் மணிரத்னத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். 

‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை ரவிவர்மனுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர். 

சிறந்த மலையாள திரைப்படமாக ‘சவுதி வெள்ளைக்கா’ தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அதன் இயக்குநர் தருண் மூர்த்திக்கு தேசிய விருதை வழங்கினார் திரவுபதி முர்மு. 

சிறந்த நடிகருக்கான ஜூரி விருது ‘குல்மோஹர்’ படத்துக்காக மனோஜ் பாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.  

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை ‘ஆட்டம்’ மலையாளப் படத்துக்காக இயக்குநர் ஆனந்த் ஏகார்ஷிக்கு வழங்கப்பட்டது. 

தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அப்போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. 

சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது, ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக அன்பறிவ் சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது. 

SCROLL FOR NEXT