Actor Megha Akash engagement photos 
சினிமா

நடிகை மேகா ஆகாஷ் திருமண நிச்சயதார்த்த ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த நடித்த ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 

தொடர்ந்து  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார்.  தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவை மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக காதலித்து வந்தார். இருவரின் நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து தம்பதியினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT