sonakshi Sinha marriage album
இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில், ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, இவர் நடிப்பில் ‘ஹீராமண்டி: தி டைமண்ட் பஜார்’ வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இவரும் இந்தி நடிகர் ஜஹிர் இக்பாலும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் இவர்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இந்து, இஸ்லாமிய திருமண சடங்குகள் ஏதுமில்லாமல் சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் பதிவு திருமணம் செய்து கொண்டனர். மாலையில் நடந்த திருமண வரவேற்பில், இந்தி திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.