Robo Shankar Daughter Indraja Engagement Photos
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கருக்கும், தன்னார்வலரான கார்த்திக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மதுரையைச் சேர்ந்த ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பின் நிறுவனர் கார்த்திக். இவர் நடிகர் ரோபோ சங்கரின் உறவினர். ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா. ‘மெர்சல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார்.இவருக்கும், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன் பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில், அவர்களுடைய திருமண நிச்சயதார்த்த விழா வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான பலர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்திரஜா - கார்த்திக்கை வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் விரைவிலேயே நடக்க இருக்கிறது. இந்த திருமணத்துக்கு சினிமா, அரசியல் எனப் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.