மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெயராம். அவர் மலையாள நடிகை பார்வதியை காதலித்து கரம்பிடித்தார். இந்த தம்பதிகளுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் காளிதாஸ் தமிழில் ‘ஒரு பக்க கதை’, ‘விக்ரம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவரது நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது.இந்நிலையில், கடந்த ஆண்டு நடிகர் காளிதாஸ் தான் தாரிணி காளிங்கராயரை காதலித்து வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். மாடலிங்கில் துறையில் கவனம் செலுத்தி வரும் தாரணி 2019-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த காளிதாஸ் - தாரிணிக்கு பெற்றோர் சம்மதத்துடன் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பானப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.