சினிமா

ஜெயம் ரவி முதல் விஜய் சேதுபதி வரை.. ‘இறைவன்’ பட நிகழ்வில் பிரபலங்கள் - ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இதனை இயக்கியுள்ளார்.
ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நேற்று (செப்.24) சென்னையில் நடைபெற்றது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT