நடிகர் ரஜினிகாந்த் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு திடீரென வருகை தந்தார்.மேலும் அங்கிருந்த பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள், பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினி திரையுலகில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு இந்த பணிமனையில் தான் நடத்துனராக பணியாற்றினார்.அடுத்து ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.