சினிமா

பனையூரில் நடிகர் விஜய் - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
நடிகர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர் திண்டுக்கல் தேனி, சேலம், கிருஷ்ணகிரி ஒசூர், விருதுநகர், சிவகங்கை, திருச்சி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் என 300 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
SCROLL FOR NEXT