அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.இப்படம் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி, தேவயாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.