நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் என பெருமளவில் கலந்து கொண்டனர்.கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற விஜய் மேடைக்கு கீழே இருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் அமர்ந்து கொண்டார். அதோடு தனது ரசிகர்கள், மாணவர்கள் தனக்குக் கொடுத்த அன்புப் பரிசையும் பெற்றுக் கொண்டார்.தமிழத்திலேயே முதன்முறையாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கினார்.