விஜய் டிவியின் `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் தனது டைமிங் மற்றும் பாடி லாங்வேஜ் காமெடியால் கவனம் பெற்றவர் தீனா. தொடக்கத்தில் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகுதான் கலக்கப் போவது யாரு நிகழச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியிருக்கிறார். பின்னர் ‘பவர் பாண்டி’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என படங்களில் நடித்தார்.தீனாவுக்கும், கிராஃபிக்ஸ் டிசைனரான பிரகதிக்கும் கடந்த ஜூன் 1-ம் தேதி பட்டுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டை என்பதால் அங்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் சின்னத்திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.