அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த ஆவணப் படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக ஒலிபரபப்பட்டது. இந்தப் பாடலுக்கு நடனக்கலைஞர்கள் மேடையில் நடனமாடினர்.கையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் விருதுடன் ஜூனியர் என்டிஆர்‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்த மகிழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்.‘ஆர்ஆர்ஆர்’படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடல், சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. ஆஸ்கர் மேடையில் இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் விருதைப் பெற்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.விருது பெற்றது குறித்து, தயாரிப்பாளர் குனீத் மோங்கா கூறும்போது,ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படக்குழுவுக்கு பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி, “நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இந்த மதிப்புமிக்க பெருமையை பெற்றுக்கொடுத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தியா மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.காட்டின் நாயகர்களான யானைகளுக்கும் காட்டு நாயகன் பழங்குடி தம்பதிகளுக்கும் இடையேயான கமுக்கமானதொரு உறவைச் சொல்லுகிறது ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படம். மும்பையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.