தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தை வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார். படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கி அத்லூரி, சம்யுத்தா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், “படத்தின் டீசரில்‘ படிப்ப பிரசாதம் மாதிரி கொடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விக்காதிங்க' என்று வசனம் வரும். அது தான் இத்திரைப்படத்தின் மையக்கரு. பள்ளியில் படிக்கும்போது பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்திவிடுவார்கள் என்று கவனமின்றி சுற்றி வந்தேன்.என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போது தான் அந்தக் கஷ்டம் தெரிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் படிப்பு மிகவும் அவசியமானது. எண்ணம்போல் வாழ்க்கை, படிப்பில் கவனம் செலுத்துங்கள். அதுதான் உங்களைக் காப்பாற்றும். நான் சரிசெய்ய வேண்டியவற்றை ஹோம் வொர்க் செய்கிறேன்” என்றார்.“நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காது. இருந்தாலும் உரிமையுடன் சொல்கிறேன். எனது காரை பின் தொடர்ந்து வராதீர்கள். உங்களை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்போதும் இதை ஊக்குவிக்கமாட்டேன். உங்களுக்கென குடும்பம் இருக்கிறது. அதை பார்த்துக்கொள்ள நீங்கள் வேண்டும். தயவு செய்து இதை பின்பற்றுங்கள்” என்றார்.மேலும், ‘வடசென்னை 2’ குறித்து வெற்றிமாறன் அலுவலகம் முன்பு சென்று கேளுங்கள். எப்போ நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக அது நடக்கும்இயக்குநர் வெங்கி அட்லூரி , “2020ல் கரோனா தாக்கம் துவங்கிய பிறகு கிடைத்த இடைவெளியில் அடுத்த படத்திற்கான சில ஐடியாக்களை யோசிக்க துவங்கினேன் அந்த சமயத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாததால் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினார்கள். ஆனால் கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு பதிலாக முன்பை விட அதிக அளவில் உயர்த்தினார்கள். பள்ளிப்பேருந்துகளை இயக்காமலேயே பேருந்துக்கான கட்டணங்களை வசூலித்தார்கள்.தொண்ணூறுகளின் இறுதியில் ஐடி கம்பெனிகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாக ஆரம்பித்த சமயத்திலேயே அரசாங்கம் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்தியது. சில பேர் இதை பயன்படுத்தி கோச்சிங் சென்டர், தனி பயிற்சி வகுப்புகள் என பயனடைய ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி கல்லூரிகளின் கட்டணமும் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.” என்றார்.