சினிமா

விடைபெற்ற நடிகர் கிருஷ்ணா - இறுதி அஞ்சலி புகைப்படங்கள்

Author : செய்திப்பிரிவு
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் மூத்த நடிகர் கிருஷ்ணா (79), உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையாவார்.
அவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதலமைச்சர்
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மறைந்ததையடுத்து ஆந்திராவில் உள்ள மால் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள இறுதி அஞ்சலி பேனர். புகைப்படம்: ஜி.என்.ராவ்
படம்: கிரி கேவிஎஸ்
படம்: ராமகிருஷ்ணா
படம்: ராமகிருஷ்ணா
படம்: ராமகிருஷ்ணா
படம்: ராமகிருஷ்ணா
நடிகர் கிருஷ்ணா மறைவையொட்டி ரத்து செய்யப்பட்ட திரையரங்க காட்சிகள் இடம்: ஆந்திரா. படம்: ஜி.என்.ராவ்
நடிகர் கிருஷ்ணா மறைவையொட்டி ரத்து செய்யப்பட்ட திரையரங்க காட்சிகள் இடம்: ஆந்திரா. படம்: ஜி.என்.ராவ்
படம்: ராமகிருஷ்ணா
நடிகர் கிருஷ்ணா மறைவையடுத்து அவரது மகன் மகேஷ்பாபுவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேரில் ஆறுதல்.
சந்திரபாபு நாயுடு நேரில் ஆறுதல்.
நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு வெங்கையா நாயுடு நேரில் அஞ்சலி
சந்திரசேகர் ராவ் அஞ்சலி
நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு ரசிகர்கள் அஞ்சலி. இடம்: ஹைதராபாத் புகைப்படம்: வி.ராஜூ
நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி நேரில் அஞ்சலி
நடிகர் கிருஷ்ணா உடல் ஹைதராபாத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணாவின் மறைவுச்செய்தியை அறிந்த சினிமா, அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் நேரில் சென்று பலரும் அஞ்சலி செலுத்தினர். படம்: ராமகிருஷ்ணா
SCROLL FOR NEXT