அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைநகர் டெஹ்ரானில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த விமான நிலையத்தை குறிவைத்து நேற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் அழிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் விமான நிலையம் அருகே விழுந்து வெடித்துச் சிதறின. இதனால் கரும்புகை எழுந்தது. துபாய் விமான நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரின் துறைமுக பகுதி மீது ஈரான் ராணுவம் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதல் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலின் போது எழுந்த ராட்சத புகையை மக்கள் மாடிகளில் இருந்து பார்வையிட்டனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அரசு கட்டிடத்தின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த குண்டுகளை வீசின. இதில் விண்ணை மறைக்கும் அளவில் புகை கிளம்பியது,
இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன. இதனால், மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க போர்க் கப்பல் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்ற எப்.ஏ-18இ சூப்பர் ஹர்னட் போர் விமானம்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களை நேற்று பார்க்கும் பொதுமக்கள்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலை ஆதரித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகை முன்பு நேற்று முன்தினம் பொதுமக்கள் பேரணி நடத்தினர்.
ஈரானின் மினாப் நகரில் உள்ள மகளிர் பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு படையினரும் மக்களும் இடிபாடுகளை அகற்றி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆபரேஷன் எபிக் ஃப்யூரிக்கு ஆதரவாக அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்து நேற்றுமுன்தினம் ஏவப்பட்ட ஏவுகணை இலக்கை நோக்கி சீறிப்பாய்கிறது .