மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது மாநாட்டின் கவனம் ஈர்த்த காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு இது. | படங்கள்: நா.தங்கரத்தினம், கிருஷ்ணமூர்த்தி
தவெகவின் 2-வது மாநாடு நடைபெறும் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதி கட்சித் தொண்டர்களின் வெள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது.
மதுரை தவெக மாநாட்டில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளதாக முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டது.
மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்திய நிலையில், அதைத் தணிக்க ட்ரோன்கள் மூலமாக தண்ணீர் தெளிக்கப்பட்டது.
மாநாட்டில் கூடிய தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன.
மதுரை தவெக மாநாட்டுத் திடலில் குவிந்த தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
மதுரை தவெக மாநாட்டில் பலரும் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொள்வதற்காக வந்ததை கவனிக்க முடிந்தது.
முன்னதாக, தவெக மாநாட்டுக்காக சாரைசாரையாக வாகனங்கள் அணிவகுத்தன. குறிப்பாக, இளைஞர்களின் வருகையே அதிகம்.