79th Independence Day: CM MK Stalin hoists the national flag at the fort - Photo Gallery 
ஆல்பம்

79-வது சுதந்திர தினம்: கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். படங்கள்: ம. பிரபு

பின்னர் பல்வேறு விருதுகளை வழங்கினார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அதில் இடம்பெற்ற 9 முக்கிய அறிவிப்புகள்:

1. விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும்.

2. விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,000 என உயர்த்தப்படும்.

3. கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோரின் வழிந்தோன்றளுக்கு நிதி உதவி ரூ.11,000 என உயர்த்தி வழங்கப்படும்.

4. 2-ம் உலகப் போரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.15,000 என உயர்த்தி வழங்கப்படும்.

5. 2-ம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் நிதி ரூ.8,000 என உயர்த்தி வழங்கப்படும்.

6. முன்னாள் படை வீரர்களின் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33,000 சதுர அடி பரப்பில் ரூ.22 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்படும்.

7. மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவு செய்யப்படும்.

8. ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.

9. தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இந்த 9 அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும்” என முதல்வர் அறிவித்தார்.

SCROLL FOR NEXT