Leaders pay tribute to M.K.Muthu Photo Gallery 
ஆல்பம்

மு.க.முத்து உடலுக்கு தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி | புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (77). கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்த அவர், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை காலை மு.க.முத்து காலமானார். 

மு.க.முத்துவின் உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தனது அண்ணன் மு.க.முத்து உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

அதைத் தொடர்ந்து, மு.க.முத்து உடல் அஞ்சலிக்காக கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.முத்துவின் உடலை பார்த்து கண்கள் கலங்கியபடி நின்றிருந்தார். 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது அண்ணன் உடலை பார்த்து கதறி அழுதார்.

நடிகர் சத்யராஜ் அஞ்சலி செலுத்தினார்.

வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.

என்.ராம் அஞ்சலி செலுத்தினார்.

எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அஞ்சலி செலுத்தினார்.
 

தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

துரை வைகோ அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
 

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அஞ்சலி செலுத்தினார்.

நக்கீரன் கோபால் அஞ்சலி செலுத்தினார்.

விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அஞ்சலி செலுத்தினார்.

மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

ராசாத்தி அம்மாள் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் விக்ரம் அஞ்சலி செலுத்தினார்.

SCROLL FOR NEXT