Tiruchendur Subramania Swamy Temple Kumbabhishekam Festival 
ஆல்பம்

எப்படி இருக்கிறது திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள்? - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. | படங்கள்: மு.லெட்சுமி அருண்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கோபுரங்கள் பல்வேறு கோணங்களில்... 

மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகாக அமைக்கப்பட்டுள்ள யாக சாலையின் யாக குண்டகங்களில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக விழாவைக் காண வரும் பக்தர்களுக்காக பல இடங்களில் குடிநீர்  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடல் பகுதியில் கூடும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு முகாமிட்டுள்ளது.

தமிழத்தின் பல பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கோயிலைச் சுற்றிலும், வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு அரண்களை அமைக்கும் பணியாளர்கள்.

கும்பாபிஷேக நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கு கோயிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. 

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்து மார்க்கமாக வருகை தரும் பயணிகள் வசதிக்காகவும், நகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்கும் திருச்செந்தூரின் வெளியே வேட்டைக்காரன் கோயில் அருகே தற்காலிகப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. 

நகரின் பல்வேறு இடங்களில் அலங்கார தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையத்தின் வளாகத்தில் தற்காலிக கழிவறை வசதிகள் வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கும்பாபிஷேக நிகழ்வுக்காக யாக சாலையில் வைத்து பூஜிக்கபட்ட கும்ப கசலங்கள் தயாராக உள்ளன. 

யாக சாலையில் வைத்து பூஜிக்கபட்ட கும்பம், கோயிலின் கோபுர கலச பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

SCROLL FOR NEXT