World's highest railway bridge Chenab in Jammu and Kashmir 
ஆல்பம்

எப்படி இருக்கிறது உலகின் மிக உயரமான ரயில் பாலம்? - செனாப் நதிப் பாலம் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணி நேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். 

செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில்பாதை திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதி மீது 1,178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் நீளம் 4,314 அடியாகும்.

SCROLL FOR NEXT