Salem Yercaud Flower Show 
ஆல்பம்

நண்பகலிலும் மூடுபனி... எப்படி இருக்கிறது ஏற்காடு? - ஸ்பாட் விசிட் க்ளிக்ஸ்

Author : செய்திப்பிரிவு

சேலத்தை அடுத்துள்ள ஏற்காடு ‘ஏழைகளின் ஊட்டி’ என சுற்றுலாப் பயணிகளால் அழைக்கப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக கோடை விழா - மலர் கண்காட்சி வரும் மே 23 தொடங்கி 29 வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் உள்ள கட்டிடங்கள், பூங்காக்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. | படங்கள்: எஸ்.குரு பிரசாத்

அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், அரசு தாவரவியல் பூங்காக்கள், ஏரிப் பூங்கா போன்றவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்கள் கொண்ட மலர்த் தொட்டிகளை அழகுற அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 

மலர்ச்சிற்பம் வைக்கப்படும் இடம், குழந்தைகள் விளையாடும் பகுதி, மரங்களில் மின் அலங்கார மின் விளக்குகள் பொருத்தும் பணி என பல்வேறு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 

கோடை விடுமுறை என்பதால் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 

கோடை மழை காரணமாக, அக்னி நட்சத்திர வெயில் காலத்திலும், ஏற்காட்டில் நண்பகல் வரையிலும் கடும் மூனிபனி நிலவுகிறது. 

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வெயிலின் தாக்கமின்றி குளிர் காற்று வீசுவது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படங்கள்: எஸ்.குரு பிரசாத்
 

SCROLL FOR NEXT