heavy rain in delta 
ஆல்பம்

தீவிர மழையில் திக்குமுக்காடும் டெல்டா - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா நெற்பயிர் வயல்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியில் கோணகடுங்கலாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், வெள்ளத்தில் மூழ்கியுள்ள சம்பா, தாளடி நடவு வயல்கள்.

அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில், பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள ஏரி உடைந்து, அதிலிருந்து வெளியேறும் மழைநீர்.

மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் பகுதியில் கனமழையால் இடிந்து விழுந்த கான்கிரீட் வீடு. |  படம்: வீ.தமிழன்பன் |

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வடுககுடியில் வாழை தோட்டத்தில் தேங்கியுள்ள மழைநீர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள சோபனாபுரத்திலிருந்து 
டாப் செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் மலை பகுதி.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வரகடைப் பகுதியில் பழவாற்று வடக்கு கரையில் ஏற்பட்ட  மண் அரிப்பால் சேதமடைந்துள்ள சாலை.

மழைநீர் நிரம்பி உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் உள்பிரகாரம். | படம்: சி.எஸ்.ஆறுமுகம் |

திருச்சி கே.கே.நகர் செல்லும் வழியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் காவல் நிலையத்தை சூழ்ந்துள்ள மழைநீர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பரிவீரமங்கலம் கண்மாயில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர்.

கும்பகோணம் திருவள்ளுவர் நகரில் மழைநீர் சூழந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர் விடுதி.

கும்பகோணம்-திருவையாறு சாலை கணபதியக்ரஹாரம் பிரதான சாலையில் வேருடன் முறிந்து விழுந்த  50 ஆண்டுகள் பழமையான மாமரம்.

SCROLL FOR NEXT