Cyclone Fengal Rain Damages in Villupuram 
ஆல்பம்

‘வரலாறு காணாத’ விழுப்புரம் மழை வெள்ள பாதிப்புகள் - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்

Author : செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் உடைந்த திண்டிவனம் - நாகாலாபுரம் பாலம். இதனால் சாலை துண்டிக்கப்பட்டது. | படங்கள்: எம்.சாம்ராஜ்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தொடர் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம். 

விக்கிரவாண்டியில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம். 

விழுப்புரம் மாவட்டம் தொடர் மழையின் காரணமாக தானியங்கள் சேமிப்பு கிடங்கியில் வைக்கப்பட்ட வேர்க்கடலை, புளி, மிளகாய் மூட்டைகள் விராக நதியில் அடித்துச் சென்றன. அவற்றை பாலத்தின் அடியில் பொதுமக்கள் முண்யடித்துக் கொண்டு எடுத்துச் சென்றனர். இடம்: விழுப்புரம் - சென்னை சாலை.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால் திருக்கோவிலுார் சாலை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழையின் காரணமாக துாண்டிக்கப்பட்ட புதுச்சேரி - சென்னை ஈசிஆர் சாலை. இடம்: கூனிமேடு

வெள்ளநீரில் பயணித்து நின்ற அரசுப் பேருந்தை தள்ளி, கரைக்கு நகர்த்தும் பொதுமக்கள்.

தண்ணீரில் சிக்கிய புதுச்சேரி பிஆர்டிசி அரசுப் பேருந்தை டிராக்டர் மூலம் இழுத்துச் செல்கின்றனர். | இடம்: மரக்காணம்.

வீசிய சுறைக்காற்றில் சாய்ந்த உயர் மின் அழுத்த கம்பி. இடம்: ஈசிஆர் சாலை மரக்காணம்.

வீசிய சுறைக்காற்றில் சாய்ந்த உயர் மின் அழுத்த கம்பியில் துணிகளை உலர்த்தும் அப்பகுதி மக்கள். | இடம்: மரக்காணம்

தொடர் மழையில் ஏரி போல் காட்சியளிக்கும் மரக்காணம் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளம்.

‘தண்ணீர்ல தத்தளித்து போய்தான் தண்ணீ குடிக்கணும்’ - விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி சாலையில் உள்ள டாஸ்மார்க கடையில் மது வாங்க தண்ணீரில் வரிசையாக செல்லும் ஆண்கள்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - திண்டிவனம் சாலை தரைப்பாலத்தை தாண்டி செல்லும் உப்பனாறு. 

வெள்ளநீர் நிரம்பி செல்லும் கடலை நோக்கி செலலும் உப்பனாறு.

தொடர்ந்து பெய்த மழையில் துவைத்த துணியை வரிசையாக சாலையின் நடுவே காயவைத்துள்ளனர். | இடம்: மரக்காணம் - திண்டிவனம் சாலை

விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் ஏரி நிரம்பி உபரி நீர் கால்வாயில் வழிகிறது.

SCROLL FOR NEXT