Puducherry affected by Cyclone Fengal and heavy rains album 
ஆல்பம்

புதுச்சேரியை புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல், மழை வெள்ள பாதிப்புகள் - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்

Author : செய்திப்பிரிவு

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் புதுச்சேரி - சென்னை நெடுஞ்சாலையில் நடுவே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி. படங்கள்: எம்.சாம்ராஜ்

பலத்த சூறைக்காற்று வீசியதில் உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் விழுந்ததில் அருந்து கிடக்கும் மின்சார கேபிள்கள். இடம்: கோரிமேடு

பலத்த மழை வெள்ளத்தில் சிக்கிய பஸ். இடம்: எல்லைப்பிள்ளைச்சாவடி 

குடைகளைப் பிடித்து இழுக்கும் பலத்த சூறைக்காற்று. இடம்: பெரியார் நகர்

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.

புதுச்சேரி - கடலுார் சாலையில் தேங்கிய மழை நீரில் தத்தளித்து வரும் வாகனங்கள்.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் நெல்லித்தோப்பு சாலையில் கொட்டும் மழையில் தத்தளித்து வரும் வாகனங்கள்.

இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் தேங்கிய வெள்ள நீர்.

ஃபெஞ்சல் புயலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முதலியார்பேட்டை மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் புகுந்த மழை வெள்ளம் நீர். 

புதுச்சேரி ஓயிட் டவுண் சப்ரன் வீதியில் சாலையில் விழுந்து கிடக்கும் மரம்.

மிஷன் வீதியில் சாலையின் நடுவே விழுந்த மரத்தை அகற்றும் நகராட்சி துறையினர்.

எஸ்வி. பட்டேல் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பொதுப்பணித் துறையினர்.

ரெயின்போ நகரில் சூழ்ந்த வெள்ளநீரை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

ரெயின்போ நகரில் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்.

வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தை நோக்கி பொருட்களை எடுத்துச் செல்லும் வெளி மாநிலத்தவர்கள். இடம்: ரெயின்போ நகர்.

மழை வெள்ளத்தில் மிகுந்த சிரமத்துடன் குடிநீர் கேனை தூக்கிச் செல்லும் நபர். இடம்: செல்லான் நகர்.

வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு செல்லும் தீயணைப்பு வீரா்கள்

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி.

வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிய வயதானவர்களை படகில் மீட்டு வரும் ராணுவ மீட்பு படையினர். இடம்: கிருஷ்ணாநகர்.

மக்களை மீட்கும் பணியில் ராணுவம்.

வெள்ளத்தால் சிக்கியவர்களை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். இடம்: 45அடி சாலை, புதுச்சேரி

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார். இடம்: 45 அடி சாலை

கொட்டும் மழையில் தத்தளித்து வரும் முதியவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தந்தை, தாய், குழ்ந்தையும் மூன்று பேரும் பொக்லீன் வாகனத்தில் வருகின்றனர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டள்ளன. இதனால், புதுச்சேரி வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மதிய உணவுக்கு திறந்திருந்த ஒரு சில கடைகளில் அலைமோதினர்.

ஃபெஞ்சல் புயலில் சாய்ந்த உயர்மின் அழுத்த கம்பிகள். | இடம்: முதலியார்பேட்டை

குமரகுருபள்ளம் பகுதியில் சூழ்ந்த மழை வெள்ளம்.

காமராஜர் சாலை சாரம் பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளநீர்.

புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயலால் வீடு ஒன்றின் மீது சரிந்து விழுந்த மரம். இடம்: காமாட்சியம்மன் கோவில் வீதி.

SCROLL FOR NEXT