ஃபெஞ்சல் புயல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரி, விழுப்புரம் நிலையைக் காட்டும் புகைப்படத் தொகுப்பு இது. படங்கள்: எம்.சாம்ராஜ்
விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார் சாவடி ஈசிஆர் சாலையில் பகல் நேரத்தில் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் சாலையில் விளக்குகளை எரிய வீட்டு சென்ற வாகனங்கள்.
புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கடற்கரை தந்திராயன் கடற்கரையில் மேடான இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட மீனவர்களின் படகுகள்.
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் சின்னம் காரணமாக உயரமான கட்டிடத்தில் கிரேன் மற்றும் மின்தூக்கிகளை கழற்றி வைக்க வேண்டும் என்ற அரசு கட்டுப்பாட்டை மீறி சின்னமுதலியார் சாவடி ஈசிஆர் சாலையோரம் கட்டப்பட்ட கட்டிடத்தில் அப்புறப்படுத்தாமல் உள்ள ராட்சத கிரேன்.
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கடற்கரையோரம் ஈசிஆர் சாலையில் பலத்த சூறை காற்றினால் சரிந்த நிலையில் தென்னை மரங்கள்.
புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி - ஈசிஆர் சாலை கோட்டக்குப்பம் ரவுண்டானா வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தில் புயல் சின்னம் காரணமாக முன்னெச்சரிக்கையாக வந்து இறங்கிய தமிழக சிறப்பு பாதுகாப்பு மீட்பு படையினர்.
புதுச்சேரி தொடர் மழையின் காரணமாக ஈசிஆர் சாலையில் வெள்ளநீர் நிரம்பிதால் சாலை அடைக்கப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி புஸ்ஸி வீதியில் குளம் போல் தேங்கிய வெள்ள நீர்.