தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மெயின் ரோட்டில் புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள். | படங்கள்: நா.தங்கரத்தினம்.
தீபாவளியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை விளக்குத்தூண்பகுதியில் ட்ரோன் கேமரா காட்சிகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
திருநெல்வேலி மாவட்டத்தில் கடைசிகட்ட தீபாவளி விற்பனை களைகட்டியது. கடைவீதிகளில் மக்கள் திரண்டு பொருட்களை வாங்கி சென்றதால் கூட்டம் அதிகமிருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தீபாவளிக்கு ஜவுளிகள், பட்டாசுகள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திருநெல்வேலி மாநகரிலும், வள்ளியூர், திசையன்விளை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது
விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் பெரும்பாலான துணிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
தீபாவளி விற்பனையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியையொட்டி திருப்பூர் மாநகரில் அவிநாசி சாலை, குமரன் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை மற்றும் ஊத்துக்குளி சாலை உட்பட நகரின் அனைத்து முக்கிய சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டத்தால் இன்று நிரம்பி வழிந்தது.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதிகளில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதுத்துணிகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இடம்: தி.நகர் | படம்: ஆர்.ரவிந்திரன்
இடம்: தூத்துக்குடி | படம்: ராஜேஷ்
இடம்: ராமநாதபுரம் | படம்: எல்.பாலசந்தர்
கோவை பெரியகடை வீதியில் தீபாவளி பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி முடிந்து அரை நாள் விடுப்பில் திரும்பிய மாணவ, மாணவிகளால் டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் காணப்பட்ட நெரிசல். | படம்: ஜெ.மனோகரன்
இடம்: தி.நகர் | படம்: ஆர்.ரவிந்திரன்