congress protest at coimbatore on annapoorna hotel gst issse 
ஆல்பம்

‘ஜிஎஸ்டி பன்’ மாலையுடன் கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை காந்தி பார்க்கில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  | படங்கள்: ஜெ.மனோகரன், பெரியசாமி

கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ஜிஎஸ்டி பன்’ மாலை அணிந்திருந்தது கவனம் ஈர்த்தது. 

காங்கிரஸ் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

“ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டிக்கிறோம்” என்று செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். 

“சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜிஎஸ்டி வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி தொழிலதிபர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்தது பாஜகவின் அப்பட்டமான பாசிச போக்காகும்” என்று  செல்வப்பெருந்தகை கூறினார்.

கோவையில் சனிக்கிழமை நடந்த இந்தக் கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

SCROLL FOR NEXT