maamadurai festival album 
ஆல்பம்

மக்களை மகிழ்வித்த மாமதுரை விழா - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் வகையில், மாமதுரை விழா சிஐஐ, யங் இந்தியன்ஸ் அமைப்பு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் தமுக்கம் மைதானத்தில் ஆக.8-ம் தேதி தொடங்கியது. இவ்விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஆக.8 முதல் 11-ம் தேதி வரை நடந்த இவ்விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கான நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், பலூன் திருவிழா, இரண்டு அடுக்கு பேருந்து பயணம், தொல்லியல் பயணம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 

நிறைவு நாளில் அலங்கார கலை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தெப்பக் குளத்திலிருந்து தொடங்கின. இதை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். 
 

கல்லூரி மாணவ, மாணவிகளின் நாட்டுப்புறக் கலைகள், நடனங்கள் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அலங்கார வாக னங்களின் அணிவகுப்பு ஊர்வலம் கே.கே.நகரில் முடிவடைந்தது.

தலைமை வழிகாட்டி சு.வெங்கடேசன் எம்.பி., யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பைசல் அகமது, துணைத் தலைவர் ஷெங்கர்லால், ஒருங்கிணைப்பாளர் விக்ராந்த் கார்மேகம் ஆகியோர் தலைமையின் கீழ் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT