69th flim fare award function album 
ஆல்பம்

அபர்ணா முதல் ஜோதிகா வரை: ஃபிலிம் ஃபேர் விருது ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் நடைபெற்ற 69ஆவது ஃபிலிம் ஃபேர் விருதுகள் விழாவில் ’சித்தா’ திரைப்படம் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர், உறுதுணை கதாபாத்திரம், இசை உள்ளிட்ட பிரிவுகளில் 7 விருதுகளைப் பெற்றது. 

மலையாளத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 

சிறந்த முன்னணி நடிகருக்கான விருது ‘பொன்னியின் செல்வன் 2’ படத்துக்காக நடிகர் விக்ரமுக்கு வழங்கப்பட்டது. 

விமர்சன ரீதியாக சிறந்த படம் பிரிவில் ’விடுதலை பாகம் 1’ படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு விருது வழங்கப்பட்டது.  

தெலுங்கில் வெளியான ‘தசரா’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் நானிக்கு வழங்கப்பட்டது. 

‘சித்தா’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது நடிகை நிமிஷா சஜயனுக்கு வழங்கப்பட்டது. 

விமர்சன ரீதியாக சிறந்த நடிகைகளுக்கான விருது ‘டாடா’ படத்துக்காக அபர்ணா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது.  

ஃபிலிம் ஃபேர் விருதுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

விமர்சன ரீதியாக மலையாளத்தில் சிறந்த படமாக ‘காதல் தி கோர்’ தேர்வு செய்யப்பட்டு அதன் இயக்குநர் ஜுட் ஆண்டனி ஜோசப்புக்கு விருது வழங்கப்பட்டது. 

‘ரங்கமார்த்தாண்டா’ தெலுங்கு படத்துக்காக சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு) விருதை பிரகாஷ்ராஜ் பெற்றுள்ளார்.

‘தசரா’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ்

மலையாளத்தில் வெளியான ‘காதல் தி கோர்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் நடிகை ஜோதிகா.

SCROLL FOR NEXT