Anant Ambani Radhika Merchant wedding 
ஆல்பம்

அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண விழாவில் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி ஷாக்ஸி மற்றும் மகளுடன் வருகை தந்தார்.
ஹாலிவுட் நடிகரும், WWE மல்யுத்த வீரருமான ஜான்சீனா மும்பை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமணத்தில் கலந்துகொண்டுள்ள அவர் அணிந்திருந்த உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், மகன் சவுந்தர்யா மற்றும் மருமகனுடன் வருகை தந்தனர். இவர்களைத் தவிர்த்து ஷாருக்கான் தொடங்கி சல்மான் கான் வரை பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள் அம்பானி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
SCROLL FOR NEXT