Anant Ambani, Radhika Merchant sangeet ceremony
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் தம்பதிகளின் திருமணம் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. முன்னதாக சங்கீத் சடங்கு எனப்படும் நிகழ்வு மும்பையில் உள்ள ஜியோ அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தோனி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், சல்மான் கான், ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.