international yoga day album 
ஆல்பம்

தமிழகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
சர்வதேச யோகா தினத்தையொட்டி சேலத்தில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம், மரவனேரி மாதவம் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். | படங்கள்: எஸ். குரு பிரசாத்
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் விளையாட்டு மைதானத்தில் யோக பயிற்சியில் ஈடுபட்ட தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சர்வதேச யோகா தின யோகா பயிற்சி ராணி மேரி கல்லூரியில் நடந்தது. இதில், மருத்துவ கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். | படங்கள்: ம.பிரபு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். | படங்கள்: ம.பிரபு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐஎன்எஸ் அடையாறில் இந்திய ராணுவம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென் பிராந்திர ராணுவ அதிகாரி கே.எஸ்.ப்ரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட முப்படை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். | படங்கள்: ம.பிரபு
SCROLL FOR NEXT