Selfie with Stalin Salem - Photo Gallery 
ஆல்பம்

செல்ஃபி வித் ஸ்டாலின் @ சேலம் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
சேலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிராவு சேலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
தொடர்ந்து இன்று காலையில் சேலம் முதல் அக்ரஹாரம் மற்றும் கடை வீதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
தேநீர் கடையில் கட்சியினருடன் தேநீர் அருந்தினார். வழிநெடுகிலும் பொது மக்கள் அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்று மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறார்.
முதல்வர் வருகையை ஒட்டி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
SCROLL FOR NEXT