WPL 2024 Opening Ceremony Highlights 
ஆல்பம்

திரை நட்சத்திர அணிவகுப்புடன் மகளிர் ஐபிஎல் தொடக்க விழா - ஆல்பம் by முரளிகுமார்

Author : செய்திப்பிரிவு
டபிள்யூபிஎல் எனப்படும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஷாருக்கான், ஷாயித் கபூர், டைகர் ஷெராஃப், வருண் தவான் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ஷாருக்கான் நடனமாடி அசத்தினார். தீப்பொறி பறக்கும் ஷாயித் கபூரின் என்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. டைகர் ஷெராஃப் நடனத்தால் விழா தொடக்க நிகழ்வு களைகட்டியது.
SCROLL FOR NEXT