Avaniyapuram Jallikattu Photo Story 
ஆல்பம்

தெறிக்கவிட்ட காளைகள் @ அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்தது. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஒரு மணி நேரத்துக்கு ஒரு சுற்று வீதம் நடைபெற்று வரும் போட்டியில், சுற்றுக்கு தலா 50 வீரர்கள் வீதம் இறக்கப்பட்டு வருகின்றனர்.
10 சுற்றுகள் நடந்த இந்தப் போட்டியில், 817 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 435 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காவல் ஆய்வாளர் உள்பட 51 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
SCROLL FOR NEXT