Pollachi International Hot Air Balloon Festival
பொள்ளாச்சி - ஆச்சிபட்டியில் 9-வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடங்கியது.இந்த பலூன் திருவிழாவுக்காக பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாந்து உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.இன்று காலை சுமார் 6 மணியளவில் இந்த பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.இந்த பலூன்கள் நூறு அடி உயரம் வரை பறக்கவிடப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன.இந்த வெப்பக்காற்று பலூனில் 100 அடி வரை பறக்க ஒரு நபருக்கு 1600 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வெப்ப காற்று பலூன் இன்று முதல் 16-ம் தேதி வரை வானில் பறக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டதை கண்டு பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் வெப்பக்காற்று பலூன் பறப்பதை கண்டு மகிழ்ந்தனர்.