New Year 2024 Celebration in chennai marina beach
சென்னை மெரினா கடற்கரையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்மெரினாவில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சாலைகளில் உற்சாகமாக வலம் வந்தனர். | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்நள்ளிரவு 12 மணிக்கு உற்சாகமாக ஒரே குரலில் ‘ஹேப்பி நியூ இயர்’ என அனைவரும் உற்சாக முழக்கமிட்டனர். கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2024-ம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்