ஆல்பம்

தேவர் ஜெயந்தி, குருபூஜை - தலைவர்கள் மரியாதை | சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
தேவர் குரு பூஜை விழாவையொட்டி, பசும்பொன் மற்றும் கோரிப்பாளையத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மூர்த்தி.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குரு பூஜை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் லட்சார்ச்சனை நடைபெற்றது. பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து வந்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டத்துடன் வந்தும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காலை தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன். தங்கம் தென்னரசு, உதயநிதி, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, அர.சக்கர பாணி, பழனிவேல் தியாகராஜன், கே.ஆர்.பெரியகருப்பன், பெ.சுவாமி நாதன், பெ.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்னில் கூட்டத்தைக் கண்காணிக்க நவீன ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் 5 டிஐஜிக்கள், 25 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 12,000 போலீஸார் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
SCROLL FOR NEXT