ஆல்பம்

பழங்கால கார்கள் கண்காட்சி @ சென்னை: புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
சென்னை ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் Heritage Cars Association of India (HCAI) சார்பில் பழம்பெரும் மோட்டார் வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.
இந்த பழம்பெரும் மோட்டார் வாகனங்களின் கண்காட்சியில் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க 56 கார்கள் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள் என 68 மோட்டார் வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியில், சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், துணை ஆணையர்கள் டி.மகேஷ்குமார் (போக்குவரத்து -தெற்கு), பொன்கார்த்திக் குமார் (அடையாறு) மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
SCROLL FOR NEXT