காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவையொட்டி, வேலூர் பேலஸ்காபே பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.வேலூர் பேலஸ்காபே பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.வேலூர் பேலஸ்காபே பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மதிமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் கோபி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. | வி. எம். மணிநாதன்காட்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மாணவர்கள். | வி. எம். மணிநாதன்கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய ஆசிரியர்கள். | படம் ஜெ .மனோகரன்காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் மதுரை சாலையில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர். அருகில் மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன், எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் உள்ளிட்டோர்.