ஆல்பம்

எண்ணெய் விளக்கு ஒளியில் தஞ்சாவூர் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடகம் - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடகம் இரவு தொடங்கி விடிய விடியப் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒளியில் நடைபெற்றது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆண்கள், இதிகாச நாயகி போன்று மேடையில் தோன்றி நடிக்கும் இந்த பாணி நாடகத்துக்குப் பாகவத மேளா நாடகம் எனப்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நரசிம்ம ஜெயந்தி விழாவில் பாகவத மேளா நாடகம் அரங்கேறும், இந்த விழாவில் பங்கேற்பதற்காக மெலட்டூர் பூர்வீகமாகக் கொண்டவர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்கள் இந்த விழா நாட்களில் சொந்த ஊருக்கு வந்து இவ்விழாவில் பங்கேற்பதை இன்னமும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இவ்விழாவின் மூலம் பக்தியும், பாரம்பரியமும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் அருகேயுள்ள ஸ்ரீ நல்லி கலையரங்கத்தில் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் ஆகியவை சார்பில் பாகதவ மேளா நாட்டிய நாடகம் தொடங்கியது.
மாலை 6 மணிக்கு ஸ்ரீலஷ்மி நரசிம்மர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு வீதியுலா, 7.30 மணிக்கு மங்கள இசை, 9 மணிக்குத் தொடக்க விழா என நிகழ்ச்சி தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒளியில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் விடிய விடிய நடைபெற்றது.
SCROLL FOR NEXT