உலகம்

“ஈரானுக்குள் நுழைந்தால் நரகத்தைச் சந்திப்பீர்கள்” - அமெரிக்க வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரானுக்​குள் அமெரிக்க வீரர்​கள் காலடி எடுத்து வைத்​தால், சவப் பெட்​டி​யில்​தான் திரும்​பிச் செல்வர் என ஈரான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்​தியை நட்பு நாடு​களுக்கு மட்​டும் ஈரான் திறந்துள்ளது. இதனால் மற்ற நாடு​களுக்கு எரிபொருள் கப்பல்​கள் செல்ல முடிய​வில்​லை.

ஹார்​முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தற்​கான கெடுவை அமெரிக்கா நீட்​டித்து வரு​கிறது. இந்​நிலை​யில் ஜப்​பானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் இருந்து யுஎஸ்​எஸ் ட்ரிபொலி போர் கப்​பல் மத்​திய கிழக்கு பகு​திக்கு வந்துள்ளது. இந்த கப்​பலில் கடற்​கரை​யில் வீரர்​களை தரை​யிறக்​கும் வசதி உள்​ளது.

          

இந்த கப்​பலில் 3,500 கடற்படை வீரர்​கள் வந்​துள்​ளனர். ஹார்​முஸ் ஜலசந்​தியை திறந்​து​விட ஈரான் மறுத்​தால், ராணுவத்தை தரை​யிறக்கி ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்நிலையில் ‘தி டெஹ்​ரான் டைம்​ஸ்’ என்ற ஈரான் தினசரி ஆங்​கில பத்​திரிக்​கை​யின் முதல் பக்​கத்​தில் ஒரு செய்தி வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதில் ‘நரகத்​துக்கு வருக’ என்ற தலைப்பில் வெளி​யிடப்​பட்​டுள்ள செய்​தி​யில் ‘ஈரானுக்​குள் நுழை​யும் அமெரிக்க வீரர்​கள் சவப்பெட்​டி​யில்​தான் திரும்பிச் செல்​வர்’ என கடும் எச்​சரிக்​கை விடுத்​துள்​ளது.

SCROLL FOR NEXT