உலகம்

பிரேசிலில் தன்னை தத்தெடுக்க வேண்டும் என்பதற்காக ‘ஆட்டிசம்’ சிறுமியாக நடித்த பெண்ணுக்கு சிறை

செய்திப்பிரிவு

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ஜாய்ன்​வில்லி பகு​தி​யில் வசிக்கும் ஆன்​மிகப் பற்​றுள்ள தம்​ப​திக்கு உள்​ளூர் பாஸ்​டர் ஒருவர் மூலம் அமண்டா மரியா சவுசா டி ஒலிவேரா என்ற 37 வயது பெண் அறி​முக​மாகி​யுள்​ளார்.

ஒலிவேரா என்ற தனது இயற்​பெயரை கேப்​ரியல் என்று மாற்​றிக் கூறியதுடன், 12 வயதான தனக்​குக் கடுமை​யான ஆட்டிசம் பாதிப்பு உள்​ளது, என்​றும் நாடக​மாடி​யுள்​ளார். அதை நம்​பிய தம்பதி இரக்​கப்​பட்டு அவரை தத்​தெடுத்து தங்​களது வீட்​டில் தங்க வைத்​துள்​ளனர். அவரது உடல் எடையைக் குறைப்​ப​தற்​கான மருத்து​வச் செல​வை​யும் அவர்​கள் ஏற்​றுக்​கொண்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், ஒலிவே​ரா​வின் பின்​னணி குறித்​துச் சந்தேகமடைந்த அவரது வளர்ப்பு அத்​தை, இணை​யத்​தில் தேடிய​போது 3 ஆண்​டு​களுக்கு முன்பு ரியோ டி ஜெனிரோ​வில் இதே​போன்ற ஒரு மோசடி​யில் அவர் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்து ஒலிவேரா கைது செய்​யப்​பட்டார்.

இதுதொடர்​பான வழக்கு விசா​ரணை​யின்​போது ஒலிவே​ரா​வின் வழக்​கறிஞர் லூசியோ சவுசா நீதி​மன்​றத்​தில் வாதிடு​கை​யில், "கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக வீடற்​றவ​ராக வாழ்ந்து வந்த ஒலிவே​ரா, தனது வாழ்​வா​தா​ரத்​துக்​காகவே இந்​தப் பொய்​யான அடை​யாளத்தை உரு​வாக்​கிக் கொண்​டார். அவர் நிதி ஆதா​யம் அடையவோ அல்​லது திருட்​டிலோ ஈடு​பட​வில்​லை" எனத் தெரிவித்தார்.

ஆனால், வழக்​கறிஞரின் வாதத்தை நிராகரித்​த பிரேசிலின் சாந்தா கதரீனா நீதி​மன்​றம், ஒலிவேரா திட்​ட​மிட்​டும், முழு சுயநினை​வுட​னும் தான் இந்த மோசடியைச் செய்​துள்​ளார் எனக் கூறி அவருக்கு 1 ஆண்டு 6 மாதம் 10 நாட்​கள் சிறைத் தண்​டனை​​ வி​தித்​துத்​ தீர்ப்​பளித்​துள்​ளது.

SCROLL FOR NEXT