புர்ஜ் கலீபா கட்டிட உரிமையாளர் முகமது அலப்பார்

 
உலகம்

வளைகுடா நாடுகளில் இந்தியர்களை பணியமர்த்துவது ஏன்? - மனம் திறக்கிறார் புர்ஜ் கலீபா கட்டிட உரிமையாளர் முகமது அலப்பார்

செய்திப்பிரிவு

துபாய்: ஐக்​கிய அரபு அமீரகத் தலைநகர் துபா​யில் உலகின் மிகவும் உயர​மான கட்​டிட​மான புர்ஜ் கலீபா அமைந்​துள்​ளது. இந்த கட்​டிடத்தை இமார் பிராப்​பர்ட்​டீஸ் நிறு​வனத்​தின் நிறு​வனரும், நிர்​வாக இயக்​குநரு​மான முகமது அலப்​பார் உரு​வாக்​கி​யுள்​ளார்.

இதுகுறித்து அபு​தாபி​யில் அண்​மை​யில் நடை​பெற்ற எமிரேட்ஸ் உச்​சி​ மா​நாட்​டில் முகமது அலப்​பார் பேசி​ய​தாவது: எங்​களது நிறுவனம் வளை​குடா நாடு​களின் பல்​வேறு இடங்களில் கட்டிடங்களை உரு​வாக்கி வரு​கிறது. எங்​களது நிறு​வனத்​தில் பெரும்​பாலும் இந்​தி​யர்​களே பணி​யாற்​றுகின்​றனர். கடின உழைப்​பு, ஒழுக்​கம், தொழில் தர்​மத்​துக்கு புகழ்​பெற்​றவர்​கள் இந்தி​யர்​கள்.

அதனால்​தான் அவர்​களை எனது நிறு​வனத்​தில் அதி​க​மாக பணியமர்த்​துகிறேன். கடின உழைப்பாளிகள் எனது பார்​வை​யில் கடின உழைப்​பு​தான் சிறந்​தது என்று கூறு​வேன். எப்​போதுமே கடின உழைப்​பின் மீது நம்​பிக்கை வைக்​கக் கூடிய​வன் நான். இந்தி​யர்​கள் கடின உழைப்​புக்​குச் சொந்​தக்​காரர்​கள். கடின உழைப்​புக்கு முக்​கி​யத்​து​வம் கொடுப்​பவர்​கள். அவர்​களின் பணி அர்ப்​பணிப்பு அபரிமித​மானது.

இந்​தி​யர்கள் தங்​கள் வேலைகளில் மிகுந்த அர்ப்​பணிப்​புடன் இருப்​ப​தால், ஒரு நாளின் எந்த நேரத்​தி​லும் வேலைக்கு வரத் தயாராக இருக்​கின்​றனர். ஒரு​வர் எவ்​வளவு கடின​மாக உழைக்கிறாரோ, அவ்​வளவு அதிர்​ஷ்டம் அவருக்​குக் கிடைக்​கும். அதி​காலை ஒரு மணிக்கு தொலைபேசி​யில் அழைக்​கும்​போது கூட இந்​தி​யர்​கள் அந்த அழைப்​பு​களுக்கு பதில் அளிக்​கின்​றனர். அவ்​வளவு கடின உழைப்​பாளி​கள் அவர்​கள். இவ்​வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT