உலகம்

நைஜீரியாவில் அமெரிக்கா தாக்குதல்: ஐஎஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: நைஜீரியா நாட்​டில் அமெரிக்க ராணுவம் நடத்​திய தாக்​குதலில் ஐஎஸ்​ஐஎஸ் மூத்த தலை​வர் அபு பிலால் (44) கொல்​லப்​பட்​டார்.

மேற்கு ஆப்​பிரிக்க நாடான நைஜீரி​யா​வில் ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்பு ஆழமாக கால் ஊன்றி நாச வேலைகளில் ஈடு​பட்டு வரு​கிறது. நைஜீரிய மக்​கள் தொகை​யில் 54% பேர் கிறிஸ்​தவர்​கள், சுமார் 46% பேர் முஸ்​லிம்​கள். அந்த நாட்​டின் வடகிழக்கு பகு​தி​யான லேக் சாத் பிராந்​தி​யத்​தில் சுமார் 7,000 ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் பதுங்கி உள்​ளனர். அவர்​களின் தலை​வ​ராக அபு பிலால் செயல்​பட்டு வந்​தார்.

தற்​போது ஐஎஸ்​ஐஎஸ் அமைப்​பின் தலை​வ​ராக அபு ஹப்ஸ் அல்- ஹாமிஷி அல் - குராஷி உள்​ளார். அவருக்கு அடுத்து 2-வது மிகப்​பெரிய தலை​வ​ராக அபு பிலால் இருந்​தார். நைஜீரி​யா​வில் வாழும் கிறிஸ்​தவர்​களை குறி​வைத்து அவர் அடிக்​கடி தாக்​குதல் நடத்தி வந்​தார். இதன் காரண​மாக கடந்த 15 ஆண்​டு​களில் மட்​டும் நைஜீரி​யா​வில் 50,000-க்​கும் மேற்​பட்ட கிறிஸ்​தவர்​கள் கொல்​லப்​பட்டு உள்​ளனர்.

ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​களுக்கு எதி​ராகப் போரிட நைஜீரிய ராணுவ வீரர்​களுக்கு அமெரிக்​கா​வின் சார்​பில் சிறப்பு பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதற்​காக சுமார் 100-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க வீரர்​கள் நைஜீரி​யா​வில் முகாமிட்டு உள்​ளனர்.

இந்த சூழலில் சுமார் 2,000 கி.மீ. தொலைவு நீளம் கொண்ட லேக் சாத் ஏரிப் பகு​தி​யின் குறிப்​பிட்ட ஒரு தீவில் அபு பிலால் பதுங்​கி​யிருப்​ப​தாக அமெரிக்க உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன்​பேரில் அமெரிக்க ராணுவம் மற்​றும் நைஜீரிய ராணுவம் இணைந்து அந்த தீவை நேற்று முன்​தினம் இரவு சுற்​றிவளைத்து தாக்​குதலை நடத்​தின. இதில் ஐஎஸ்​ஐஎஸ் மூத்த தலை​வர் அபு பிலால் கொல்​லப்​பட்​டார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘ஐஎஸ்​ஐஎஸ் அமைப்​பின் அபு பிலாலை அழித்​திருக்​கிறோம். இதன் மூலம் உலக அளவில் ஐஎஸ்​ஐஎஸ் அமைப்பு பெரும் பின்​னடைவை சந்​தித்​து இருக்​கிறது’’ என கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT