உலகம்

2-வது ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: கடந்த 19-ல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்​பற்​றியது.

இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்​பட்ட மற்​றொரு ஈரானிய எண்​ணெய் கப்​பலை அமெரிக்க கடற்​படை நேற்று கைப்​பற்​றியது. இந்த எண்​ணெய் கப்​பல் 330 மீட்​டர் நீளம் கொண்​டது. 3 லட்சம் டன் கச்சா எண்​ணெயை ஏற்​றிச் செல்​லும் திறன் கொண்​டது. ஈரான் துறை​முகத்​தில் இருந்து புறப்​பட்ட டிபானி கப்​பல் சிங்​கப்​பூரை நோக்கி சென்று கொண்​டிருந்​தது.

அமெரிக்க கடற்​படை வீரர்​கள் நேற்று ஹெலி​காப்​டர்​கள் மூலம் டிபானி கப்​பலில் இறங்கி அந்த கப்​பலை கைப்​பற்​றினர். இதுதொடர்​பான வீடியோவை அமெரிக்க கடற்​படை வெளி​யிட்டு உள்​ளது. அதோடு வெளி​யிடப்​பட்ட பதி​வில், “பொருளா​தார தடை விதிக்​கப்​பட்ட ஈரான் கப்​பலை சர்​வ​தேச கடல் பகு​தி​யில் கைப்பற்​றினோம். தடை செய்​யப்​பட்ட எண்​ணெய் கப்​பல்​களின் போக்​கு​வரத்தை அனு​ம​திக்க மாட்​டோம்’’ என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

ஈரானின் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களை கைப்​பற்​று​வது போர் நிறுத்த மீறல் ஆகும் என்று அந்த நாட்டு தலை​வர்​கள் குற்​றம் சாட்டி வரு​கின்​றனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “போர் நிறுத்​தத்தை பலமுறை ஈரான் மீறி​யிருக்​கிறது’’ என்​று குறிப்​பிட்​டு உள்​ளார்​.

SCROLL FOR NEXT